-
ஜார்கண்டில் மீண்டும் பா.ஜ., கூட்டணியில் ஆட்சி
 ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ. - ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆகிய கட்சிகள் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இக்கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் ஆதரவு தர சம்மதித்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் அர்ஜூன்முண்டா தேர்வு செய்யப்படவுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பார்லிமென்ட்டில் இடது சாரிகள் கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.பி.க்கள் மாறி வாக்களித்தை தொடர்ந்து ஜார்க்கண்டில் சிபுசோரன் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மே.23-ம் தேதி பா.ஜ. விலக்கி கொண்டதால் ...


-
பீகார் சட்டசபைக்கு 6 கட்டதேர்தல் : அக்டோபர் 21ல் ஆரம்பம்
 புதுடில்லி : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 21ல் துவங்கி, நவம்பர் 20 வரை, ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். பீகாரில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது, அன்று மாலை தெரிந்து விடும்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பீகார் சட்டசபையில் 243 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவிக் காலம், வரும் ...


-
பழமை வாய்ந்த சஞ்சீவ்ராயப்பெருமாள் கோவிலை புனரமைத்த பொதுமக்கள்
 உடுமலை : வரலாற்றை உணர்த்தும் வகையில், மலை மீது உள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பணிகளை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள தும்பலபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ., தூரத்தில், 900 அடி உயரத்தில் மலை உச்சியில், பழமை வாய்ந்த சஞ்சீவ்ராய பெருமாள் கோவில் உள்ளது. பழங்கால வரலாற்றை பறை சாற்றும் வகையில், அமைந்துள்ள கோவிலில், சஞ்சீவ்ராய பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன.சுண்ணாம்பு கலவை கலந்த செங்கற்களை கொண்டு கோவில் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் குறித்த முழுவிவரங்களுக்கான சான்றுகள் அந்தப்பகுதி ...


-
வறட்சி பாதித்த பகுதிகளில் இலவசமாக தரலாம்: பா.ஜ.,
 புதுடில்லி : "வீணாகும் உணவு தானியங்களை இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்க, அரசு விரும்பவில்லை' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் திறந்த வெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் கோதுமை மழை,வெள்ளம் போன்றவற்றால் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான டன் உணவு தானியங்கள் எலிகளுக்கு உணவாகின்றன.வீணாகும் உணவுப்பொருட்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும், ஏழை மக்களுக்கு கொடுக்குமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. ஆனால்," சுப்ரீம் கோர்ட் கருத்துப்படி, ...


-
மத்திய மந்திரி சபையில் மாற்றம்: இளைஞர்களுக்கு இடம் :மன்மோகன்
 புதுடில்லி : "பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடருக்குள் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
"மத்திய அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் ஐ.மு., கூட்டணி தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை இல்லை. மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது' என, பாரதிய ஜனதா தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. நச்சல் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் பிரதமர் ...


-
சிவில் சர்வீஸ் தேர்வில் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தேர்வு
 சென்னை : ""கிராமத்தில் பிறந்திருந்தாலும் சரியான முறையில் கடுமையாக உழைத்தால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறலாம்,'' என, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பிரபாகரன் தெரிவித்தார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) கடந்த 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் அனைத்து தேர்வுகளையும் முடித்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டவர்களில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் 2008ம் ஆண்டில் தமிழகத்தை சேர்ந்த பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டையை சேர்ந்த இவரது தந்தை சுப்ரமணியன் ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி. ...


-
தகவல் உரிமை சட்ட நோக்கத்தையே சிதைத்து விட்டனர்: ஜெயலலிதா
 சென்னை : "என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம், தகவல் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் உரிமை சட்டப்படி, தலைமை தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில் தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட்ட போது, கருணாநிதி தனக்கு பதிலாக, அன்பழகனை அனுப்பி ...


-
ரேஷன் கடைகளில் எடை மோசடி வெட்ட வெளிச்சம்: "நவீனம்' புகுத்தியும் முறைகேடு
 சிவகங்கை : ரேஷன் கடைகளில் தராசுகளுக்கு பதில் எலக்ட்ரானிக் மெஷின்கள் வழங்கப்பட்ட போதும், எடை மோசடி குறைந்தபாடில்லை. மெஷினை திருத்தி முறைகேடு செய்யும் "வண்டவாளம்', அமைச்சரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் கூட்டுறவு, நுகர்பொருள் வாணிப கழகம், சுய உதவிக்குழு, முன்னாள் ராணுவத்தினர் மூலம் 639 ரேஷன் கடைகள் உள்ளன. கடைகளுக்கு மாதந்தோறும் 6,800 டன் அரிசி, 130 டன் கோதுமை, தலா 215 டன் துவரம், உளுந்தம் பருப்புகள் வினியோகிக்கப்படுகின்றன. மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 765 கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் இப்பொருட்கள் கிடைக்கின்றன.
எடை மெஷின்: ரேஷன் ...


-
மொபைல் போனில் கூலாக பேசி காதலில் விழ வைக்கும் பெண்கள்
 கோவை :மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், "சைபர் க்ரைம்' பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், "செக்ஸ் மெசேஜ்' மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, "டார்ச்சர்' கொடுப்பது தான் அதிகம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத ...


|