Kovai City Portal

Dinamalar.com |மே 19,2012


  • வாகா எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

    லாகூர்:முக்கிய இடங்களையும், முக்கிய நபர்கள் மீதும் தாக்குதல் நடத்த, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 166 பேர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட, அபீஸ் சயீது பற்றிய தகவல் கொடுப்போருக்கு அமெரிக்கா, 50 கோடி ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது. ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான சயீது, இந்திய-பாகிஸ்தான் வர்த்தக உறவை எதிர்க்கிறார். மிகவும் சாதகமான நாடு என்ற அந்தஸ்தை, ...




  • பாகிஸ்தான் அரசு பணத்திலிருந்து அஜ்மீர் தர்காவுக்கு நன்கொடை

    இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அஜ்மீர் தர்காவுக்கு கொடுத்த, 5 கோடி ரூபாய் நன்கொடை, அந்நாட்டின் அரசு பணத்திலிருந்து அளிக்கப்படும் என, அதிபரின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த மாதம் 8ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு விஜயம் செய்தார். இவரது, மனைவியும் மறைந்த முன்னாள் பிரதமருமான பெனசிர் புட்டோவும் இந்த தர்காவுக்கு முன்பு விஜயம் செய்துள்ளார். இதற்கிடையே இந்த தர்காவுக்கு வந்து தொழுகை செய்த சர்தாரி, தர்காவுக்கு, 5 கோடி ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.இது குறித்து, அதிபரின் தகவல் ...




  • இலங்கை மாஜி தளபதிக்கு ஜாமின்

    கொழும்பு:இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில், விடுதலை புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு இந்த வெற்றிக்கு அதிபர் ராஜபக்ஷேவும், சரத் பொன்சேகாவும் உரிமை கொண்டாடினர். இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரசியல் எதிரியாகி விட்ட, சரத் பொன்சேகா மீது ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், பொன்சேகாவின் மனைவி அனோமா, ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து ஐகோர்ட், ...




  • எண்ணெய் தேவைக்கு சவுதியை நாடும் இந்தியா

    வாஷிங்டன்: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்காக இந்தியா மற்றும் ஈராக் நாடுகளை நாடத்துவங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலையடுத்து, இந்தியா தற்போது ஈரானிடமிருந்து பெற்றுவரும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கத்துவங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது தனது கச்சா எண்ணெய் தேவைக்காக சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளை நாடத்துவங்கியுள்ளதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க செயலாளர் ராபர்ட் பிளாக் தெரிவித்துள்ளார். ...




Latest News

Login Form

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED
  • Buzz Kovai

    Buzz at Kovai

    Classifieds